நகைக்காக மூதாட்டியை கொன்ற தாய் மற்றும் மகள் சிக்கிய சிசிடிவி காட்சி

நகைக்காக மூதாட்டியை கொன்ற தாய் மற்றும் மகள் சிக்கிய சிசிடிவி காட்சி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே திருமணத்திற்கு சென்ற அம்புஜம் என்ற 62 வயது மூதாட்டி மர்மமான முறையில் காணாமல் போனார். போலீசார் நடத்திய விசாரணையில், புலிக்குறிச்சி காட்டுப்பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, லோகாம்பாள் மற்றும் அவரது 17 வயது மகள் அந்த மூதாட்டியை பைக்கில் அழைத்துச் சென்றது அம்பலமானது.

திருமண மண்டபத்தில் விடுவதாகக் கூறி மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்ற இருவரும், நகைக்காக அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். கைதான அவர்களிடமிருந்து 4 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *