ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரின் ஜாமீன் ரத்து உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை
March 12, 2026

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் சிறைக்குச் செல்லவிருந்த 12 பேருக்கும் தற்காலிகமாகப் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
முன்னதாக கீழ் நீதிமன்றம் வழங்கிய பிணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.