சஹாரன்பூர் கொடூரம் காதலியின் தலையை துண்டித்து கொலை செய்த காதலன் சிக்கினான்
December 18, 2025

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தனது திருமணத்திற்கு தடையாக இருந்த லிவ்-இன் காதலி உமாவை, காதலன் பிலால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தான். ஹிமாச்சல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று காரின் சீட் பெல்ட்டாலேயே கழுத்தை நெரித்து, பின்னர் இறைச்சி வெட்டும் கத்தியால் தலையை துண்டித்து காட்டில் வீசியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட உமாவின் துண்டிக்கப்பட்ட தலையை, மனிதநேய அடிப்படையில் அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டு திங்களன்று இறுதிச் சடங்குகளை செய்தனர். கொலையாளி பிலால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.