வங்கதேச ஊடுருவல்களா? 1.90 கோடி சந்தேகத்திற்குரிய வாக்காளர்களால் வங்காளத்தில் மோதல்
December 18, 2025

மேற்கு வங்கத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் 1.90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ‘சந்தேகத்திற்குரியவர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது பெரும் அரசியலையே கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஆய்வில், தந்தை மற்றும் மகனின் வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பது போன்ற பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தேகத்திற்குரிய வாக்காளர்களில் பெரும்பாலானோர் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் நிலவுகிறது. இந்தத் தரவுகளில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும், உண்மையான வாக்காளர்களைக் கண்டறியவும் தற்போது மாவட்ட அளவில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.