உக்ரைன் வெற்றியை புதின் விரும்புகிறார் என்ற டிரம்ப் பேச்சைக் கேட்டு சிரித்த ஜெலென்ஸ்கி

உக்ரைன் வெற்றியை புதின் விரும்புகிறார் என்ற டிரம்ப் பேச்சைக் கேட்டு சிரித்த ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினை புகழ்ந்து பேசியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புதின் மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்றும் உக்ரைன் ஒரு வெற்றிகரமான நாடாக மாற வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட அதிபர் ஜெலென்ஸ்கி தன் சிரிப்பை அடக்க முடியாமல் வெளிப்படுத்திய முகபாவனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சந்திப்பில் போர்நிறுத்தம் தொடர்பான 95 சதவீத சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் டான்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. புதின் உக்ரைன் மக்களுக்கு மலிவான எரிசக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாக டிரம்ப் குறிப்பிட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது. இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் இதில் தீர்வு கிடைக்காவிட்டால் போர் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *