விஜய்க்கு எச்சரிக்கை ஆதவ் அர்ஜுனா ஒரு சகுனி என மச்சான் ஜோஸ் மார்ட்டின் அதிரடி
March 12, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒரு ‘சகுனி’ மற்றும் திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் மார்ட்டின் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் தனது பாதையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கட்சியில் கூட்டணி அமைப்பதைத் தடுத்து அதிகாரப் பசிக்காக ஆதவ் செயல்படுவதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் கரூர் விபத்து மற்றும் செந்தில் பாலாஜியின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் ஆதவ் இருப்பதாகக் குற்றம் சாட்டிய ஜோஸ், தங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல விஜய்யின் அரசியலையும் அவர் சிதைக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். இந்த உறவினர்களுக்கு இடையிலான மோதல் மற்றும் விஜய்க்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.