சிலிண்டர் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் தென் மாவட்டங்களில் அதிரடி வேட்டையில் சிக்கிய கும்பல்

சிலிண்டர் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் தென் மாவட்டங்களில் அதிரடி வேட்டையில் சிக்கிய கும்பல்

வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதையும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க தென் மாவட்டங்களில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தீவிர சோதனையில் இறங்கியுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விதிகளை மீறிய உணவக உரிமையாளர் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலிண்டர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தற்காலிக தட்டுப்பாட்டை சீர் செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *