தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் தமிழகத்தை உலுக்கும் அந்த கோர சம்பவம்

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் கடத்தப்பட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததுடன், இது பாலியல் வன்கொடுமை கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த கொடூரத்தைக் கண்டித்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தமிழக அரசிடம் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மட்டும் போதாது என்றும், அவர்களை ஊர் மத்தியில் நிற்க வைத்து கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். தற்போது போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.