பெண்கள் பாதுகாப்பிற்காக கோவை காவல்துறையின் அதிரடி டிஜிட்டல் முயற்சி கோவை டிஜி காப் சாட்போட்

பெண்கள் பாதுகாப்பிற்காக கோவை காவல்துறையின் அதிரடி டிஜிட்டல் முயற்சி கோவை டிஜி காப் சாட்போட்

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் வசதிக்காக ‘Kovai Digi Cop’ எனும் வாட்ஸ்அப் சாட்போட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில் இந்த டிஜிட்டல் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவசர கால உதவியை எளிதாக்கும் நோக்கில் இந்த நவீன தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 98400 91100 என்ற எண்ணின் மூலம் ஆன்லைன் புகார்கள் மற்றும் சைபர் கிரைம் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம். இச்சேவையின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளார். தற்போது மாவட்ட எல்லைகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த வசதி விரைவில் மாநகர பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *