தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுமா என்பது குறித்து அரசு இன்று அவசர ஆலோசனை
March 10, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்த மாநில அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் இருப்பு விவரங்களைக் கேட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், மக்கள் அதிகப்படியாக முன்பதிவு செய்வதைத் தவிர்க்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய 21 முதல் 25 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.