கொசுவத்தி சுருளால் நேர்ந்த விபரீதம் கூடுவாஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

கொசுவத்தி சுருளால் நேர்ந்த விபரீதம் கூடுவாஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியில் கொசுவத்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி மற்றும் அவர்களது இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு கொசுத் தொல்லைக்காக ஏற்றி வைக்கப்பட்ட சுருள் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த துணிகளில் பற்றியுள்ளது. இதனால் வீடு முழுவதும் பரவிய நச்சுப் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பார்த்திபன், ஜெயசித்ரா மற்றும் குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிகாலையில் வீட்டிலிருந்து கரும்புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே அழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *