சென்னையில் திருமண தடையால் தந்தை தற்கொலை செய்த நிலையில் மகளும் உயிரை மாய்த்த சோகம்
March 9, 2026

சென்னை வடபழனியில் 30 வயதான மகள் பாக்யாவிற்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை கிருஷ்ணகுமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள் பாக்யாவும் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு மரணங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.