சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகளிர் தின விழாவில் கட்சியின் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய், தனது தேர்தல் களம் குறித்து தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் விஜயுடன் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டி.நகர் தொகுதியில் என்.ஆனந்த் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதவ் அர்ஜுனா, ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட பல முக்கிய பெயர்கள் வெவ்வேறு தொகுதிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *