டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் தீட்டிய ரகசிய சதித்திட்டம் அம்பலம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக டொனால்ட் டிரம்ப்பை கொல்ல ஈரான் மேற்கொண்ட சதித்திட்டங்களை அமெரிக்க நீதித்துறை வெளிப்படுத்தியுள்ளது. ஈரானிய ஆதரவு பெற்ற ஆசிப் ராஜா மெர்ச்சன்ட் மற்றும் பர்ஹாத் ஷாகேரி ஆகியோர் இந்த திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே இந்த கொலை முயற்சியை ஈரான் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கைச் சேர்ந்த கூலிப்படையினர் மூலம் டிரம்ப்பை அகற்ற ஷாகேரி திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் பிடிபட்ட மெர்ச்சன்ட் டிரம்ப் மற்றும் பைடன் உள்ளிட்ட தலைவர்களை கொல்ல தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டார். தற்போது இந்த சதியில் தொடர்புடையவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி ஷாகேரி கொல்லப்பட்டதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.