நெதன்யாகுவுடன் ஆலோசனை செய்து ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா டிரம்ப் அதிரடி தகவல்

நெதன்யாகுவுடன் ஆலோசனை செய்து ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா டிரம்ப் அதிரடி தகவல்

மத்திய கிழக்கில் நீடிக்கும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆலோசித்து கூட்டு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ள நிலையில், இரு நாடுகளும் பின்வாங்க மறுத்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், இரு தரப்பினரும் தங்களது கடுமையான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *