ஈரானின் அடுத்த உச்ச தலைவராகிறார் மோஜ்தபா கமேனி

ஈரானின் அடுத்த உச்ச தலைவராகிறார் மோஜ்தபா கமேனி

அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது மகன் மோஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். திங்களன்று நடைபெற்ற 88 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இனி ஈரானின் அனைத்து முக்கிய விவகாரங்களிலும் மோஜ்தபாவின் முடிவே இறுதியானதாக இருக்கும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் பதற்றத்தில் உள்ள நிலையில், அடுத்த இலக்கு புதிய தலைவரே என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதனால் மோஜ்தபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போர்ச் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *