டி20 உலகக்கோப்பை: அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்? இந்திய அணிக்கு புதிய தலைவலி!

டி20 உலகக்கோப்பை: அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்? இந்திய அணிக்கு புதிய தலைவலி!

டி20 உலகக்கோப்பை தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில் இந்திய அணி காயம் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணிக்குத் திரும்பியது நிம்மதியளித்தாலும், இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் உடல்நிலை தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று உபாதை காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியில் அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை. முன்னதாக அமெரிக்காவிற்கு எதிரான போட்டியின் போதும் அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. உடல் சோர்வு மற்றும் செரிமானப் பிரச்சனை இன்னும் சரியாகாததால், வியாழக்கிழமை நடைபெறவுள்ள நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோஷேட் கூறுகையில், அபிஷேக் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றும், அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சற்று கலக்கத்தில் இருந்தாலும், பும்ரா மற்றும் சுந்தர் பயிற்சியைத் தொடங்கியிருப்பது அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பிசிசியஐ (BCCI) மருத்துவக் குழுவின் அடுத்தகட்ட முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *