தேர்தலுக்கு முன் யூனுஸின் அதிரடி! கொல்லப்பட்ட தீபுவின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதி உதவி

தேர்தலுக்கு முன் யூனுஸின் அதிரடி! கொல்லப்பட்ட தீபுவின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதி உதவி

வங்கதேச பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நாட்டு இடைக்கால அரசு. மைமன்சிங்கில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் தீபு தாஸின் குடும்பத்திற்கு 50 லட்சம் டாக்கா (வங்கதேச நாணயம்) நிதியுதவி வழங்க தலைமை ஆலோசகர் டாக்டர் முஹம்மது யூனுஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதியுதவித் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக 25 லட்சம் டாக்காவும், மீதமுள்ள தொகை உயிரிழந்த தீபுவின் தந்தை, மனைவி மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பாகவும் வழங்கப்பட உள்ளது.

சமீபத்தில் கல்வி ஆலோசகர் டாக்டர் சி.ஆர். அப்ரார், உயிரிழந்தவரின் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். “ஒரு உயிரை எந்தப் பணத்தாலும் ஈடு செய்ய முடியாது, ஆனால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் அரசு உறுதியாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அரசின் நற்பெயரை உயர்த்துவதற்கான ஒரு அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *