ஆபத்தில் உதவிய ‘சல்லு பாய்’: ராகுல் ராயின் மருத்துவமனை பில்லை ரகசியமாக கட்டிய சல்மான் கான்!

பாலிவுட்டின் ‘ஆஷிகி’ பட நாயகன் ராகுல் ராய், ‘எல்ஏசி’ படப்பிடிப்பின் போது திடீரென மூளை முடக்குவாதத்தால் (Brain Stroke) பாதிக்கப்பட்டார். மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைக்காக பல லட்சங்கள் செலவானது. பண நெருக்கடியால் ராகுல் ராயின் குடும்பம் தவித்தபோது, எந்த விளம்பரமும் இன்றி முன்வந்து உதவியுள்ளார் சல்மான் கான்.
இதுகுறித்து ராகுல் ராயின் சகோதரி பிரியங்கா கூறுகையில், “யாரும் இல்லாத நேரத்தில் சல்மான் கான் தான் எங்களுக்கு கைகொடுத்தார். மருத்துவமனையில் நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பில்லை அவர் ஒரு நொடியில் செலுத்திவிட்டார். அதுமட்டுமின்றி, அடிக்கடி போன் செய்து ராகுலின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பலரும் சல்மான் கானை விமர்சித்தாலும், அவர் தனக்கு ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும், இந்த உதவியை அவர் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை என்றும் ராகுல் ராய் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.