பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு ஏமாற்றம் பாதுகாப்பு மற்றும் தனியார்மயமாக்கலில் மத்திய அரசு தீவிரம்

பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு ஏமாற்றம் பாதுகாப்பு மற்றும் தனியார்மயமாக்கலில் மத்திய அரசு தீவிரம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. வரி செலுத்துவோர் ₹28 லட்சம் கோடி பங்களித்த போதிலும் வருமான வரியில் சலுகைகள் வழங்கப்படவில்லை. மாறாக, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிச்லுகை அளிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு காணாமல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் இலக்கை ₹80,000 கோடியாக அரசு உயர்த்தியுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ₹7.86 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளையில், உணவு மற்றும் ஆரோக்கியம் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு நிதி அளிக்கப்பட்டிருந்தாலும், விலைவாசி உயர்வு மற்றும் சேமிப்பு குறைவால் அவதிப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த பட்ஜெட் பெரும் கவலையையே மிச்சப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *