நூற்றுக்கணக்கான சடலங்கள் மற்றும் செல்வாக்குமிக்க குற்றவாளிகள் தர்மஸ்தலாவின் பகீர் வாக்குமூலம்

நூற்றுக்கணக்கான சடலங்கள் மற்றும் செல்வாக்குமிக்க குற்றவாளிகள் தர்மஸ்தலாவின் பகீர் வாக்குமூலம்

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோவிலில் துப்புரவு பணியாளராக இருந்த ஒருவர், 1998 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களை ரகசியமாக அடக்கம் செய்ய வற்புறுத்தப்பட்டதாக நீதிபதியிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த சடலங்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் கூறினார். செல்வாக்குமிக்க நபர்களின் அச்சுறுத்தலால் தலைமறைவாக இருந்த அவர், தற்போது குற்றவாளிகளின் பெயர்களை மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடு புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ள அந்த ஊழியர், தனக்கு பாதுகாப்பு கோரியுள்ளார். பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட இந்த கொடூர உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *