ஹாடி கொலை வழக்கில் வங்கதேசத்தின் குற்றச்சாட்டை ஆதாரமற்றது என மறுத்தது இந்திய எல்லை பாதுகாப்பு படை

ஹாடி கொலை வழக்கில் வங்கதேசத்தின் குற்றச்சாட்டை ஆதாரமற்றது என மறுத்தது இந்திய எல்லை பாதுகாப்பு படை

இன்க்லாப் மேடைத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் குற்றவாளிகள் இந்தியா தப்பிச் சென்றதாக வங்கதேச காவல்துறை கூறிய புகாரை மேகாலயா போலீஸ் மற்றும் பிஎஸ்எஃப் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இந்த விவகாரத்தில் வங்கதேசத்தின் யூனுஸ் நிர்வாகம் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக இந்தியத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எல்லைத் தாண்டி யாரும் வரவில்லை என்றும், இது தொடர்பாக வங்கதேசத்திடமிருந்து முறையான தகவல்கள் எதுவும் வரவில்லை என்றும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதாரங்கள் இன்றி இந்தியா மீது பழி சுமத்தும் முயற்சியை இந்தியப் பாதுகாப்புப் படையினர் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *