குறைந்த செலவில் வெளிநாடு செல்ல ஆசையா வியட்நாம் பயணத்தின் ரகசியம் இதோ
December 29, 2025

மலைச்சரிவுகளில் பசுமையான நெல் வயல்கள், கடல் மற்றும் மலைகளின் சங்கமம் என வியட்நாம் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது. குறிப்பாக இங்குள்ள ஹா லாங் பே, பழமையான கோயில்கள் மற்றும் வியக்கத்தக்க கட்டடக்கலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கின்றன. கலாச்சாரம் மற்றும் சுவையான உணவுகளுக்குப் பெயர்பெற்ற இந்த நாடு, பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது.
இந்தியாவின் ஒரு ரூபாய் வியட்நாமின் சுமார் 295 டோங்கிற்கு சமம் என்பதால், அங்கு செலவு செய்வது மிகவும் எளிது. சரியான திட்டமிடலுடன் சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருந்தால், எவரும் இந்த அழகிய நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம். மிதக்கும் சந்தைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காண வியட்நாம் இப்போது இந்தியர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது.