21 நாட்கள் ஒரு கப் மாதுளை பழம் சாப்பிட்டால் நிகழும் ஆச்சரியங்கள்! ஆய்வில் வெளியான தகவல்

மாதுளை விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் உள்ள பாலிபினால்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் (Blood Pressure) மற்றும் இருதயம் தொடர்பான அழுத்தத்தைத் (Heart Stress) தடுக்கவும் உதவுகின்றன. மேலும், மாதுளை விதைகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து (Oxidative Stress) சருமத்தைப் பாதுகாத்து, சருமப் பொலிவுக்கு உதவுகிறது. இதனுடன், தினசரி ஒரு கப் மாதுளை விதைகளை 21 நாட்களுக்குச் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 21 நாட்கள் மாதுளை விதைகளை உட்கொள்வது உடனடியாக ஆற்றலை வழங்கி, மனநிலையை மேம்படுத்துகிறது (Mood) மற்றும் மன அழுத்தத்தைக் (Stress) குறைக்கிறது. மாதுளை பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன, மூளையைப் பாதுகாத்து, நினைவாற்றலை மேம்படுத்துகின்றன. மேலும், மாதுளையில் அதிகப்படியான நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை (Constipation) தடுக்க உதவுகிறது. ஆண்களுக்கு விந்தணுக்களின் (Sperm) எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.