2026 இலும் தொடரும் ஜாதி கொடுமை, தமிழா தமிழா மேடையில் வெடித்த மோதல்
March 9, 2026

ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் ஜாதி பாகுபாடு குறித்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து மணம் முடித்த பெண், தனது கணவர் வீட்டில் தண்ணீர் குடத்தைத் தொடக்கூட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி கண்ணீர் வடித்தார். மேலும், ஜாதி காரணங்களுக்காகக் கணவரின் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவிக்கு நேர்ந்த அவமானத்தைத் தட்டிக்கேட்காத கணவரைத் தொகுப்பாளர் ஆவுடையப்பன் கடுமையாகச் சாடினார். இதில் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு அரங்கே அதிர வைத்தது. நவீன காலத்திலும் வேரூன்றிக் கிடக்கும் இந்த ஜாதிய மனப்பான்மை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.