விமான கழிப்பறையில் பீடி குடித்த பயணியால் பெரும் பரபரப்பு
March 9, 2026

டெல்லியில் இருந்து கோவா சென்ற ஆகாசா ஏர் விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையிலேயே பீடி குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷிஷ் என்ற அந்த பயணியிடம் லைட்டர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது விமான பாதுகாப்பு விதிகளை மீறும் செயலாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் கோவாவில் தரையிறங்கியதும் அந்த பயணி உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய செயல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.