13 ஆண்டு கால நரக வேதனையிலிருந்து விடுதலை ஹரிஷ் ராணாவின் கருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி அனுமதி

13 ஆண்டு கால நரக வேதனையிலிருந்து விடுதலை ஹரிஷ் ராணாவின் கருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி அனுமதி

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கடந்த 2013-ம் ஆண்டு கல்லூரி கட்டிடத்திலிருந்து விழுந்து 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி படுக்கையில் இருந்தார். அவரது தந்தையின் கோரிக்கையை ஏற்று, நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு ஹரிஷுக்கு கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை ஹரிஷ் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டதையடுத்து, உயிர் காக்கும் கருவிகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. 13 ஆண்டுகள் மகனைப் பராமரித்த பெற்றோரின் தியாகத்தைப் பாராட்டிய நீதிபதிகள், கருணை கொலை தொடர்பாக மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *