விஜய் கூட்டணிக்கு வந்தால் உச்சி முகர்ந்து கொண்டாடுவோம் செல்லூர் ராஜு அதிரடி

விஜய் கூட்டணிக்கு வந்தால் உச்சி முகர்ந்து கொண்டாடுவோம் செல்லூர் ராஜு அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். விஜய் தங்கள் கூட்டணியில் இணைந்தால் அவரைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம் என்றும், கூட்டணிக் கட்சிகளை கௌரவிப்பது அதிமுகவின் பண்பு என்றும் அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் உற்சாகமாகத் தெரிவித்தார்.

திமுக அரசு நீட் தேர்வு மற்றும் மதுவிலக்கு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டதாக அவர் சாடினார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் திமுகவிற்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *