13 ஆண்டுகால கோமா துயரம் ஹரீஷ் ராணாவிற்கு கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி

13 ஆண்டுகால கோமா துயரம் ஹரீஷ் ராணாவிற்கு கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி

சண்டிகரில் 2013-ல் கட்டிடத்திலிருந்து விழுந்து கோமாவிற்கு சென்ற பொறியியல் மாணவர் ஹரீஷ் ராணாவிற்கு, ‘செயலற்ற கருணைக்கொலை’ செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் முன்னேற்றம் இல்லாததாலும், குடும்பத்தின் கடும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு, ஹரீஷின் உயிர் காக்கும் சிகிச்சைகளை நிறுத்த உத்தரவிட்டது. இந்தியாவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறும் முதல் செயலற்ற கருணைக்கொலை இதுவாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் தனது மகன் கண்ணியமான மரணத்தைப் பெறுவார் என்று ஹரீஷின் தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *