சிலிண்டர் தட்டுப்பாட்டால் எகிறியது வடை பஜ்ஜி விலை அதிர்ச்சியில் பொதுமக்கள்
March 11, 2026

தமிழகம் முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தேநீர் கடைகளில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் பகுதிகளில் 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு வடை தற்போது 10 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது கடைகளில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு உள்ளதால் வியாபாரிகள் கடும் கவலையில் உள்ளனர். புதிய சிலிண்டர்கள் கிடைக்காவிட்டால் கடைகளை மூட வேண்டிய சூழல் உருவாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இக்கட்டான நிலை நீடித்தால் சிறிய உணவகங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.