125 ஆண்டு பழமையான அரச மரத்தை வெட்டாமல் கட்டப்பட்ட பிரம்மாண்ட நான்கு அடுக்கு வீடு

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள கேஷர்வானி குடும்பத்தினர், 125 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை வெட்டாமல் அதன் கிளைகளுக்கு இடையே ஒரு அற்புதமான நான்கு அடுக்கு வீட்டைக் கட்டி சாதனை படைத்துள்ளனர். 27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத்தில், மரத்தின் வேர்கள் தரைத்தளத்திலும் அதன் கிளைகள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் அறைகள் வழியாகவும் இயற்கையாக நீண்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இந்த வீடு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
இந்த வீடு ஆன்மீக மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அரச மரம் 24 மணி நேரமும் ஆக்சிஜனை வழங்குவதால், இக்குடும்பத்தினர் சுத்தமான காற்றைப் பெறுகின்றனர். மரத்தின் எந்தப் பகுதியையும் சேதப்படுத்தாமல் பொறியாளர்களின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த சுற்றுச்சூழல் நட்பு இல்லம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயற்கையை அழிக்காமல் அதனுடன் இணைந்து வாழ்வது எப்படி என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு பாடமாக இந்தத் த்ரீ-ஹவுஸ் அமைந்துள்ளது.