அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை தீர்த்த நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை தீர்த்த நெகிழ்ச்சி சம்பவம்

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆந்திராவின் யூ கொத்தப்பள்ளி கடற்கரைக்கு சென்ற நேமானி பிரணவ் மற்றும் சுசிதா என்ற உடன்பிறப்புகள், சத்தையா என்ற தெருவோர வியாபாரியிடம் நிலக்கடலை வாங்கினர். அப்போது பணம் இல்லாததால் அந்த வியாபாரி அவர்களுக்கு இலவசமாக வழங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய இருவரும், அந்த நன்றியை மறக்காமல் உள்ளூர் எம்.எல்.ஏ உதவியுடன் சத்தையாவை தேடினர்.

தேடுதலில் சத்தையா உயிருடன் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து, அவரது கிராமத்திற்குச் சென்ற உடன்பிறப்புகள் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தனர். சத்தையாவின் நேர்மை மற்றும் பெருந்தன்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது குடும்பத்தினருக்கு 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கினர். ஒரு சிறிய உதவிக்கு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அவர்கள் காட்டிய இந்த மனிதாபிமானம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *