ஹைட்ரஜன் ரயில் முதல் உச்சகட்ட பாதுகாப்பு வரை 2025-ல் இந்திய இரயில்வே படைத்த புதிய சாதனை

ஹைட்ரஜன் ரயில் முதல் உச்சகட்ட பாதுகாப்பு வரை 2025-ல் இந்திய இரயில்வே படைத்த புதிய சாதனை

இந்திய இரயில்வே வரலாற்றில் 2025 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் மற்றும் வந்தே பாரத் 4.0 விரிவாக்கம் ஆகியவை பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘கவச்’ பாதுகாப்பு கருவி மற்றும் மின்மயமாக்கல் பணிகள் மூலம் இரயில் பயணம் இப்போது முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவைகளைப் பொறுத்தவரை, போலி முன்பதிவுகளைத் தவிர்க்க 3 கோடிக்கும் அதிகமான ஐடிகளை ஐஆர்சிடிசி முடக்கியுள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விபத்துகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகக் குறைவாக பதிவாகியுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் மற்றும் கூடுதல் ரயில்கள் மூலம் இந்திய இரயில்வே சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *