ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் கடும் சிக்கல் எழுந்துள்ளது

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் கடும் சிக்கல் எழுந்துள்ளது

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் ராணுவ மோதலால் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், மாற்று வழிகள் மூலம் எரிவாயுவை இறக்குமதி செய்யவும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. சிலிண்டர் முன்பதிவு கால வரம்பு 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், தட்டுப்பாட்டை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உற்பத்தி அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விநியோகத் தடையால் ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வணிக ரீதியான எரிவாயு பயன்பாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *