மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இறக்குமதியை நம்பியுள்ள எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சர்வதேச மோதல்களால் நாட்டின் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மாற்று வழிகள் மற்றும் கையிருப்பு எரிபொருளை முறையாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நிலைமையைக் கையாள உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு பதுக்கலைத் தடுக்க சிலிண்டர் முன்பதிவு கால வரம்பு 25 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு தடையின்றி எரிவாயு கிடைப்பதை கண்காணிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான எரிவாயு விநியோகத்தையும் முறைப்படுத்த அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.