வெளிநாடுகளில் பிச்சை எடுத்த 51 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் அதிரடியாக வெளியேற்றம்

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்த ஆண்டு பிச்சை எடுத்த குற்றத்திற்காக சுமார் 51,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் சவூதி அரேபியா மட்டும் 24,000 பேரை வெளியேற்றியுள்ளது. இது பாகிஸ்தானின் சர்வதேச நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் உம்ரா பயணத்தின் பெயரால் வெளிநாடுகளுக்குச் சென்று, சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயல்வதும் பிச்சை எடுப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால் சட்டவிரோத குடியேற்றம் குறைந்து, பாகிஸ்தானின் பாஸ்போர்ட் தரவரிசை உயர்ந்துள்ளது. நிலைமையை சீர்செய்ய, ஜனவரி முதல் வெளிநாட்டு பயணங்களுக்கான குடியேற்ற நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.