வீட்டு கேஸ் சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை
March 12, 2026

தமிழகத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1967 அல்லது 044-28592828 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போர் பதற்றத்தால் வணிக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு தற்போது இந்த அதிரடி சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.