விஜய் ஹசாரே தொடரில் மாஸ் காட்டும் ஐந்து வீரர்கள் விரைவில் இந்திய அணியில் நுழைய வாய்ப்பு

விஜய் ஹசாரே தொடரில் மாஸ் காட்டும் ஐந்து வீரர்கள் விரைவில் இந்திய அணியில் நுழைய வாய்ப்பு

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதால், உள்ளூர் போட்டிகளில் ஜொலிக்கும் இந்த வீரர்களை பிசிசிஐ தேர்வுக்குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மும்பை அணிக்காக சர்பராஸ் கான் அதிரடியாக 157 ரன்கள் குவிக்க, உத்தரப்பிரதேசத்தின் துருவ் ஜூரல் மூன்று போட்டிகளில் 307 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். பந்துவீச்சில் ஜீஷன் அன்சாரி மற்றும் ராமகிருஷ்ணன் கோஷ் ஆகியோர் விக்கெட்டுகளை அள்ளி தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதிக ரன்கள் குவித்த அமன் மொகாடேவும் இந்திய அணியின் கதவை தட்டி வருவதால், நியூசிலாந்து தொடரில் இவர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *