புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளில் ஒளிந்திருக்கும் பேராபத்து ஒரு சிறிய கிளிக் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளில் ஒளிந்திருக்கும் பேராபத்து ஒரு சிறிய கிளிக் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்

புத்தாண்டு கொண்டாட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி சைபர் மோசடியாளர்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் நச்சு இணைப்புகளைப் (Links) பரப்பி வருகின்றனர். வாழ்த்து அட்டைகள் அல்லது பரிசுகள் என்ற பெயரில் வரும் இந்த லிங்குகளை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். சில நேரங்களில் செயலிகளை நிறுவச் சொல்லி அதன் மூலம் உங்கள் ஓடிபி மற்றும் அழைப்புகளை மோசடியாளர்கள் தங்கள் வசப்படுத்திக் கொள்கின்றனர்.

அறியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை தவிர்க்குமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நண்பர்களிடம் இருந்து வரும் செய்தியாக இருந்தாலும் உண்மைத்தன்மையை ஆராயாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். உங்கள் போனில் கால் பார்வர்டிங் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *