விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவுக்கு அச்சமா? நிர்மலா சீதாராமனின் அதிரடி கருத்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. அண்மைய பொதுக்கூட்டங்களில் விஜய்யின் திராவிடக் கட்சிகள் மீதான விமர்சனம் மற்றும் பாஜக குறித்த அவரது மௌனம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், விஜய்யின் அரசியல் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய்யின் அரசியல் வருகையைக் கண்டு பாஜக அல்ல, திமுகதான் அஞ்சுகிறது என்று கூறியுள்ளார். விஜய்யின் எழுச்சியும், அதிமுக-பாஜக கூட்டணியின் பலமும் திமுகவை நிலைகுலையச் செய்துள்ளதாக அவர் விமர்சித்தார். தோல்வி பயத்தால் தான் திமுக அரசு இலவச அறிவிப்புகளை வெளியிடுவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.