விஜய்க வருகையால் திமு‌கவிற்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி தாக்குதல்

விஜய்க வருகையால் திமு‌கவிற்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி தாக்குதல்

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை ஆளும் திமுகவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, விஜய்யின் அரசியல் வரவு பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய்யைக் கண்டு திமுக தான் பயப்பட வேண்டும் என்று கூறினார். ஒருபுறம் விஜய்யின் அரசியல் எழுச்சி, மறுபுறம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அபரிமிதமான வளர்ச்சி என இரண்டையும் கண்டு திமுக கலக்கத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

திமுக அரசு தோல்வி பயம் காரணமாகவே பொதுமக்களை திசைதிருப்ப இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதோடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் சாடினார். மத்திய அமைச்சரின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *