வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் ஆதிக்கம் செலுத்தினாலும் உடைந்தது 67 ஆண்டுகால சாதனை
March 18, 2026

வடகொரிய நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆளும் கட்சி 99.93 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக 0.07 சதவீத எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அங்கு மாற்று வேட்பாளர்கள் இல்லாத நிலையில், வேட்பாளர் பெயரை அழிப்பதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சிறிய அளவிலான எதிர்ப்பு வாக்குகளும் கிம் ஆட்சிக்கு எதிரான மக்களின் மறைமுக எதிர்ப்பாகவே சர்வதேச ஊடகங்களால் பார்க்கப்படுகிறது. 99.93 சதவீத ஆதரவுடன் கிம் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும், இந்த 0.07 சதவீத வாக்குகள் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவு தற்போது உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.