பாஜகவின் பிடிவாதத்திற்கு எடப்பாடி போடும் பலத்த செக்

தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது. குறிப்பாக சிட்டிங் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்பதால் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் தேர்தல் வியூகக் குழு மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி, இறுதிப் பட்டியலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸை விட கூடுதல் இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் சூழலில், 27 இடங்களுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றுள்ள இடங்களை விடக் குறைவாக ஒதுக்கி, அதிமுக யாருக்கும் அடிமையல்ல என்பதை நிரூபிக்க அவர் வியூகம் அமைத்துள்ளார். தேர்தல் நிபுணர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்ய எடப்பாடி தீவிரமாக களமிறங்கியுள்ளார்.