ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியாவிற்கு சிறப்பு விலக்கு அளித்தது அமெரிக்கா

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியாவிற்கு சிறப்பு விலக்கு அளித்தது அமெரிக்கா

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீராக வைத்திருக்க இந்தியாவிற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த 30 நாட்களுக்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடு என்றும் உலக சந்தையில் ஸ்திரத்தன்மையை பேணவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் ரஷ்யாவிற்கு பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது என அமெரிக்கா கூறியுள்ளது. ஈரானுடனான போரினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சமாளிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா தவிர்த்திருந்த நிலையில் இந்தியாவின் இத்தகைய பொறுப்பான அணுகுமுறையை அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் பாராட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *