யூடியூப்பை விட அதிக வருமானம் இனி எக்ஸ் தளத்தில் கிடைக்கும் இளன் மஸ்க் அதிரடி

உள்ளடக்க உருவாக்குப்பாளர்களுக்கு (Content Creators) அதிக வருமானம் வழங்கும் வகையில் ‘எக்ஸ்’ தளத்தில் புதிய மாற்றங்களை இளன் மஸ்க் அறிமுகப்படுத்த உள்ளார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த அவர், முறைகேடுகளைத் தடுத்து உண்மையான படைப்பாளிகளுக்கு யூடியூப்பை விட கூடுதல் ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான தொழில்நுட்பப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மோசடிகளைத் தவிர்க்கப் புதிய வழிமுறைகள் கையாளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தளங்களுக்கு இடையே நிலவும் போட்டியில், படைப்பாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. எத்தனை பார்வைகளுக்கு எவ்வளவு ஊதியம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வாய்ப்பு படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக அமையும் என்பதால் சமூக வலைதளங்களில் இது பேசுபொருளாக மாறியுள்ளது.