மேற்குவங்க தேர்தல் ஒரே கட்டமாக நடக்குமா டெல்லியில் நடக்கும் முக்கிய ஆலோசனை
February 13, 2026

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையம் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதற்கு சுமார் 2000 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படைகள் தேவைப்படும் என்பதால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
கூடுதல் கவனம் தேவைப்படும் மாவட்டங்களாக முர்ஷிதாபாத் மற்றும் பிர்பூம் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்த முதற்கட்ட திட்டமிடல் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.