கோடிக்கணக்கான சொத்து இருந்தும் சிறையில் வாடும் நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ்

கோடிக்கணக்கான சொத்து இருந்தும் சிறையில் வாடும் நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ்

பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் 9 கோடி ரூபாய் கடன் தொடர்பான வழக்கில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். படம் இயக்குவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதது மற்றும் காசோலை மோசடி புகாரில் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி அவர் சரணடைந்தார்.

ஒவ்வொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில் ராஜ்பால் யாதவ் இத்தகைய நிதி நெருக்கடியில் சிக்கியது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி குடும்ப திருமண நிகழ்வு உள்ள நிலையில் அவரது விடுதலை நீதிமன்றத்தின் கையிலேயே உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *