மலிவு விலை ட்ரோன்களால் ரஷ்யாவை திணறடிக்கும் உக்ரைனின் புதிய ஆயுதம்

மலிவு விலை ட்ரோன்களால் ரஷ்யாவை திணறடிக்கும் உக்ரைனின் புதிய ஆயுதம்

உக்ரைன் போர்க்களத்தில் ‘ஸ்டிங்’ எனப்படும் சிறிய வகை இன்டர்செப்டர் ட்ரோன்கள் ரஷ்யாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு பிளாஸ்க் போன்ற தோற்றமளிக்கும் இந்த சிறிய ட்ரோன்கள், ரஷ்யாவின் அதிவேக மற்றும் விலை உயர்ந்த தற்கொலை படை ட்ரோன்களை வான்வெளியிலேயே இடைமறித்து அழிக்கின்றன. வெறும் 1000 டாலர் மதிப்பிலான இந்த ட்ரோன்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரஷ்ய ஆயுதங்களை அழிப்பதன் மூலம் மாஸ்கோவிற்கு கடுமையான பொருளாதார இழப்பையும் போர் பின்னடைவையும் ஏற்படுத்தி வருகின்றன.

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து ‘ட்ரோன் சுவர்’ ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த ட்ரோன்கள், எதிர்கால போர்க்களத்தின் போக்கை மாற்றியமைக்க உள்ளன. விலை உயர்ந்த ஏவுகணைகளுக்கு மாற்றாக, குறைந்த செலவில் எதிரி நாட்டு ட்ரோன்களை வீழ்த்தும் இந்த உக்ரைனிய தொழில்நுட்பம் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது புடினின் நவீன பாதுகாப்பு அமைப்புகளுக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *