மனைவியின் வயிற்றில் காதலனின் குழந்தை துரோகத்தை எதிர்கொண்டு கணவர் எடுத்த அதிரடி முடிவு

திருமண வாழ்க்கையில் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு கணவர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து முதலில் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அந்த குழந்தை தனது மனைவியின் காதலனுக்கு பிறந்தது என்ற கசப்பான உண்மை தெரிந்ததும் அவர் நிலைகுலைந்து போனார். இருப்பினும் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடாமல் ஒன்பது மாதங்கள் பொறுமை காத்து மனைவியின் பிரசவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மிகக்கவனமாக செய்து முடித்தார்.
குழந்தை பிறந்த உடனேயே அந்த நபர் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் உடனடியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதுடன் மனைவியின் காதலனை வரவழைத்து குழந்தையின் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தார். எந்தவித சொத்து தகராறுமின்றி அமைதியாக அந்த உறவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுமணம் செய்து தனது இரு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.