மத்திய அரசு அனுமதி மறுப்பு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஐரோப்பிய பயணம் ரத்து
February 9, 2026

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செக் குடியரசு மற்றும் நெதர்லாந்து செல்லவிருந்த பயணம் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாக இந்த முக்கிய பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. உரிய அரசியல் அனுமதி கிடைக்காததால் தற்போது இந்த ஐரோப்பிய பயணம் கைவிடப்பட்டுள்ளது.
பகவந்த் மானின் வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் பயணங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலை அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு இலக்கு வைப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.